பதுளை மோதலில் மாணவன் காயம்

பதுளை கந்தகெட்டி பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இரு மாணவ குழுக்களுக்கிடையில் கடநத சில தினங்களாக முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.