பதுளை மாவட்டத்தில் கடும் மழை மண்சரிவு அபாயம் ஏற்படும் அச்சம்

பெய்துவரும் கடும் மழையால் பதுளை மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு,பதுளை மாவட்ட அரச அதிபர் நிமால் அபேயசிரி மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நூறு மில்லிமீட்டருக்குமேல் மழைபெய்யுமிடத்து அப்பகுதிமக்கள் பாதுகாப்பான இடங்களைநோக்கி இடம்பெயறுமாறும் கேட்டுள்ளார்.

மண்சரிவு அபாயம் எதிர்நோக்கப்பட்டிருக்கும் மாவட்டத்தின் சகல இடங்களிலும் மழைபெய்யும் அளவைக் கணக்கிடும் இயங்திரங்கள் பொறுத்தப்பட்டுள்ளன. அத்துடன், மாவட்டத்தின் அனைத்து கிராமசேவை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலாளர்கள் பெருந்தோட்ட முகாமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அப்புத்தளைப் பகுதியில் இடம்பெயர்ந்து பாடசாலைக் கட்டடங்களில் தஞ்சம் அடைந்திருக்கும் மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் கிரமமாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

பெய்துவரும் கடும் மழை காரணமாக வீட்டுச் சுவர் இடிந்துவிழுந்ததில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் சிக்குண்டு பலியாகியுள்ளார்.

மொனராகலைப் பகுதியின் கும்புக்கன் என்ற இடத்தைச் சேர்ந்தவை.எம். ஞானவதிஎன்ற 45 வயதுநிரம்பிய மூன்றுபிள்ளைகளுக்குத் தாயே சுவர் இடிந்துவிழுந்ததில் மரணமாகியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]