பதுளை பொது வைத்தியசாலையில் தமிழர்களுக்கு பாரபட்சம் : மக்கள் கடும் குற்றச்சாட்டு

பதுளை பொது வைத்தியசாலையில் தமிழர்களுக்கு பாரபட்சம் நிலவுவதால் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாக்கி வருகின்றனர்.

பதுளை பொது வைத்தியசாலையில் கடமையில் இருக்கின்ற தனியார் பாதுகாப்பு பிரிவினரால் திட்டமிட்ட அடிப்படையில் நோயாளர்களை பார்வையிடுவதற்காக செல்கின்ற தமிழ் உறவினர்களும் நண்பர்களும் அசெகரியங்களுக்கு உள்ளாக்கப்படுவதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக தெரியவருவதாவது,

பதுளை பொது வைத்தியசாலையில் தனியார் பாதுகாப்பு பிரிவினர் வைத்தியசாலைக்கான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழர்களை கண்டதும் அவர்களை மனிதாபிமானம் அற்ற முறையில் நடாத்துவதாக அங்கு நோயார்களை பார்வையிடுவதற்காகச் செல்லும் உறவினர்கள் நண்பர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பெரும்பான்மை மக்களை ஒரு மாதிரியாகவும் சிறுபான்மை மக்களை ஒரு மாதிரியாகவும் இவர்கள் கவனிக்கின்றார்கள்.வைத்தியசாலையில் ஒருசில வாட்டுகளுக்கு நோயாளர்களை பார்வையிடுவதற்கு பாஸ் நடைமுறை இருக்கின்றது. ஆனால், அந்த நடைமுறை தமிழர்களுக்கு மாத்திரமே பெரும்பான்மையினருக்கு அந்த நடைமுறையை இவர்கள் கவனிப்பது இல்லை.

நோயாளர்களை பார்வையிட வருகின்றவர்களை தகாத வார்த்தைகளால் பேசுவதும் அவர்களை விரட்டியடிப்பதும்.அவர்களிடம் கேள்வி கேட்க முற்படுகின்றவர்களை தாக்க முயற்சி செய்வதும் என பல மனிதாபிமானதமற்ற நடவடிக்கையில் பாதுகாப்பு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர். அது தவிரவும் இன்னும் பல இன்னல்களுக்கு தாங்கள் ஆளாகிவருவதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரின் ககவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் கூறியுள்ளதாவது ,

அ.அரவிந்தகுமார்
அ.அரவிந்தகுமார்

தன்னிடம் பலரும் இது தொடர்பாக முறைப்பாடுகளை தெரிவித்துள்ளதாகவும் தான் இது தொடர்பாக ஊவா மாகாண சுகாதார அமைச்சர் மாகாண ஆளுநர் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு அனைத்து விடயங்களையும் கடிதம் மூலம் அறிவித்ததோடு, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி இருந்த பொழுது இது தொடர்பாக எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தொடர்பாக தனக்கு உரிய தரப்புகளிடம் இருந்து எந்தவிதமான அறிவித்தலும் இதுவரையில் கிடைக்கவில்லை.

இன்னும் ஒர் இரு நாட்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிககை தொடர்பில் அறிவித்தல் கிடைக்காத பட்சத்தில் தான் இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசின் சுகாதார அமைச்சின் ஊடாக மேற்கொள்ள தீர்மானித்திருப்பதாகவும், தேவை ஏற்படுமாயின் உரிய தரப்பினருக்கு எதிராக பொது மக்களை திரட்டி வைத்திய சாலை வளாகத்தில் போராட்டம் ஒன்றையும் செய்ய தான் தீர்மானித்திருப்பதாகவும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.

பதுளை பொது வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக பல வெளிமாவட்டங்களில் இருந்து நோயாளர்கள் அங்கு வருகை தருகின்றனர். குறித்த தரப்பினரின் செய்பாடு காரணமாக அவர்கள் உள ரீதியாக பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் பொது மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]