பதவி விலகிய 16 அமைச்சர்கள் விடுத்துள்ள கோரிக்கை

அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று 17ஆம் திகதி  இடம்பெற்றுள்ளது.

இதன்போது, எதிர்காலத்தில் எடுக்கவுள்ள தீர்மானங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் தொடர்ந்து இணைந்திருப்பது குறித்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அரசியல் மற்றும் மதத்தலைவர்களுடன் கலந்துரையாடவேண்டும் என, யோசனையை முன்வைக்க இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்சியின் மத்தியக் குழு கூடுவதற்கு முன்னர், கிடைக்கும் சகல சந்தர்ப்பங்களிலும் அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ளதாக முன்னாள் அமைச்சர் சந்திம வீரக்கொடி, முன்னதாக தெரிவித்திருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]