பதவி விலகிய அமைச்சர்களை பொறுப்பேற்க தயார் – மஹிந்த

சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் 16 பேரை பொறுப்பேற்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா யோசனைக்கு ஆதரவாக வாக்களித்த அமைச்சர்களை பொறுப்பேற்கவே அக்கட்சி தயாராகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு தலைக்கு எண்ணெய் வைக்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் நேற்று அவர் இதனைக் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]