பதவியை துறக்கும் மஹிந்த?

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் அவர் தனது பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான முடிவை அறிவிப்பார் என கூறப்படுகின்றது.

அத்துடன், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தான் எந்த நேரத்திலும் விலகத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் பதவி விலகுவது தொடர்பான முடிவை கைவிடுமாறும், கட்சியின் பொதுச்செயலாளர் பதவி தொடர்பில் இதுவரை எவரும் அதிருப்தி தெரிவிக்கவில்லை எனவும் ஜனாதிபதி, மஹிந்த அமரவீரவுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐ.தே.கட்சி மற்றும் ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினரல்லாத ஒருவரே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக வர வேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், கட்சியின் தலைவர் எடுக்கும் எந்தத் தீர்மானத்திற்கும் தான் ஒத்துழைப்பை வழங்குவதாகவும் கட்சியை விட்டுச் செல்லப் போவதில்லை எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]