பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது- அருண் ஜெட்லி

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக இந்திய மத்திய மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

அத்தோடு, வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 6.86 கோடியாக உயர்ந்துள்ளதே அதற்கு சாட்சி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2016ஆம் ஆண்டு பாஜக அரசால் அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபா பணமதிப்பிழப்பு நடவடிக்கை இன்று வரை சர்ச்சைக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாகி வருகிறது.

இந்நிலையில், கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த அறிவிப்பு வெளியானது என கூறப்பட்டபோதிலும், தற்போது சுமார் 93% மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணம் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப பெறப்பட்டது என்ற தகவல் மூலம் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதல் என விமர்சித்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய மந்திரி அருண் ஜெட்லி, கருப்பு பணத்தை தடுப்பது, வருமான வரி தாக்கலை அதிகரிப்பதே பணமதிப்பு நீக்கத்தின் நோக்கமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளதோடு, மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]