பண்ணை வீட்டில் 5 நாட்கள் ஆடையின்றி சித்திரவதைக்கு உள்ளான மாணவி- திருத்தணியில் நடந்த கொடூரம்

திருத்தணி அருகே காணாமல் போன பள்ளி மாணவி பண்ணை வீடு ஒன்றில் 5 நாட்கள் நிர்வாணமாக அடைத்து வைக்கப்பட்டு கூட்டுப் பாலியல் சித்திரவதை செய்யப்பட்டு 5-வது நாளில் கொலை செய்யப்பட்ட் கொடூரம் அரங்கேறியுள்ளது. திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகளான 10-ஆம் வகுப்பு மாணவி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பாததையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த மாதம் 11-ஆம் ஓடை ஒன்றின் அருகில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளும் பள்ளி மாணவியின் சீருடையும் மாணவியுடையவை என உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த வழக்கில் தடயங்கள் சாட்சியங்களைக் கொண்டு மாணவியின் உறவினனுமான கல்லூரி மாணவன் சங்கரய்யா, பண்ணை வீட்டின் உரிமையாளன் நாதமுனி, நண்பன் ஜெகதீஷ்பாபு, அவனது சகோதரன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மோகன் என்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மாணவி சங்கரய்யா உறவினன் தானே என நம்பி அவன் அழைத்த இடத்துக்குச் சென்றதும், பண்ணை வீட்டில் சங்கரய்யா 5 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு மாணவியை அங்கேயே விட்டுவிட்டு செல்ல முயன்றதும் தெரிய வந்தது. அப்போது தப்பிக்க முயன்ற மாணவியை அனைவரும் கைகால்களை கட்டி வீட்டுக்குள் அடைத்து வைத்ததும் 5 நாட்கள் மாணவியை நிர்வாணமாகவே அடைத்து வைத்து மாறி மாறி சீரழித்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் மாணவியை உயிருடன் விட்டுவிடுவதாகவும் நடந்ததை யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் மிரட்டியதாகவும், ஆனால் மாணவி சீற்றத்துடன் அனைவரையும் காட்டிக் கொடுக்கப்போவதாகத் தெரிவித்ததையடுத்து அரிவாளால் கழுத்தை வெட்டிக் கொன்று ஓடையில் புதைத்ததும் தெரியவந்தது.

தொடர்புடைய 5 பேருக்கும் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் பொள்ளாச்சி பாலியல் வழக்கைப் போன்றே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எந்த வழக்கறிஞர்கலும் ஆஜராகக்கூடாது என்று மாணவி தரப்பில் கோரப்பட்டுள்ளது. பொள்ளாச்சி மற்றும் திருத்தணி சம்பவங்கள் மூலம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் வாழ்வதற்கு தமிழகம் பாதுகாப்பு அற்ற இடமா என்ற கேள்வி எழாமல் இல்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]