இரசவாதக்கலையே தற்காலத்தில் இரசாயனவியல் விஞ்ஞானமாக வளர்ச்சியடைந்துள்ளது. என்பதனையும், சித்த மருத்துவத்தில் இதன் முக்கியத்துவம், உலோகவியலில் இரசவாதத்தின் இன்றியமையாமை, இரசத்தின் முக்கியத்துவம் என்பனவற்றையும் தமிழராகிய நாம் நமது தனித்துவக் கலைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் எண்ணத்திலும் இரசவாதத்தின் அடிப்பகைளை எடுத்துக் கூறும் நோக்கிலே இத்தொகுப்பு அமைகிறது.

நவீன யுகத்தில் இரசாயனவியலாக மாற்றமடைந்து வளர்ச்சி பெற்ற இரசவாதக் கலையானது உலோகவியல் மற்றும் சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியுள்ளது. ஆனால் தற்காலத்தில் இரசவாதக் கலையானது மக்கள் மத்தியில் கண்கட்டு வித்தை ,மாயாஜால வித்தை, ஏமாற்று வேலை என்ற நிலையிலே பார்க்கப்படுகின்றது. மக்கள் சமூகத்தில் இது பற்றிய சரியான புரிந்துணர்வும், தெளிவின்மையுமே இதற்கு காரணம் எனலாம்.மேலும் இவை பற்றிய தகவல்கள் இன்றும் வெளிவராமையும் இதனை மேற்கொள்வோர் இரசவாத வித்தையினை இரகசியமாகப் பேனணுவதும் மற்றும் இது பற்றிக் கூறுகின்ற இலக்கியங்களில் இவ்விடையங்கள் குறியீட்டு மொழி, வேறு பெயர்கள், மேலோட்டமாக ஒரு கருத்தினையும், ஆழ்ந்த சிந்தனையில் இன்னோர் கருத்தினையும் புலப்படுத்தும் வகையிலலும் அமைந்து காணப்படுகின்றமை இதற்குக் காரணமாகிறது.

இன்றைய காலகட்டத்தில் எத்துறை சார்ந்த அறிவும் விஞ்ஞான பூர்வமான அணுகு முறையினையும் அறிவியற் கருத்துக்களின் செழுமையினையும் கொண்டமைய வேண்டியது அவசியமாகிறது. தொழில் நுட்பவியலசார் உயர் கருவிகள் கண்டுபிடிக்கப்பட முன்னரே பௌதீகவியல் சார்ந்த உண்மைகளை நம் முன்னோர்கள் தங்களுடைய அக உணர்வினாலும் பரிசோதனைகளினாலும் இயற்கை நடைமுறைகளினாலும் கண்டறிந்துள்ளனர். இவ்வாறு கண்டறிந்த அறிவியலில் வானியல், இரசாயனவியல், மெய்யியல், மருத்துவம், சோதிடம், கணிதவியல், தொழில் நுட்பங்கள் போன்ற பல்வேறு அறிவியல் சார் துறைகள் அடங்குகின்றன. சமயம் என்பதற்கு அப்பால் சகல அறிவியல் துறைகளுக்கும் முன்னோடியாக எம்மவர்கள் காணப்பட்டமை வியப்பில் ஆழ்த்தும்.

இரசாயனவியல்
இரசாயனவியல்

இரசாயனவியல் என்பது பூமண்டலத்திலுள்ள எல்லாப் பொருட்களின் அமைப்பையும், குணங்களையும் ஆராய்வதும், காலப்போக்கில் அவை அடையும் எண்ணற்ற மாறுதல்களையும் அம்மாறுதல்களினால் ஏற்படும் புதிய பொருட்களின் குணச்சிறப்புக்களையும் விளக்குவதாகும். இது சேதன, அசேதனக் கூறுகளைக் கொண்டமைந்தது. ஒரு பொருள் எந்த மூலக்கூறுகளாலானது? சூழலில் அவை அடையும் மாற்றங்கள், அவற்றால் சூழலில் ஏற்படும் தாக்கம், மாற்றம், புதிய பொருட்களின் தோற்றம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டது. இரசாயனவியல் என்பது ஒட்சிசன், ஐதரசன், காபனீரொட்சயிட், கீலியம், ஆகன், லித்தியம், வெர்லியம், காபன்….போன்ற வாயுக்களின் மூலக்கூறுகள், சேர்வைகள் என்பவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

மருத்துவ நூல்கள், சித்தர்கள் இதளினால் (பாதரசத்தினால்) தாழ்ந்த கனியங்களை (உலோகங்களை) உயர்ந்த உலோகமான தங்கமாக மாற்றியமைக்கும் இதள் மாற்றியத்தினை மேற்கொண்டதாகக் கூறுகின்றன. இவ்விதள் மாற்றியம் வடமொழியில் ‘இரசவாதம்’ எனப்படுகின்றது. இக் கலையைக் குறிக்கும் அல்ச்செமி (Alchemy) எனும் சொல்லிலிருந்தே கெமிஸ்றி (Chemistry) எனும் சொல் தோன்றியது. இக் கெமிய நூலே இரசாயனம் எனப்படுகின்றது. இம்முறையில் இதனை தமிழில் ‘இதளியம்’  என்கின்றனர்.MixedMetals

இரசவாதம் என்பது “ஒரு உலோகத்தை மற்றுமொரு உலோகமாக மாற்றும் கலையாகும்.” அதாவது, “இரும்பு, செம்பு, வெள்ளி, பாதரசம் போன்றவைகளை உயர்ந்த உலோகமான தங்கமாக மாற்றும் கலையாகும்.” இரசவாதம் எனும் சொல்லுக்குm “ இரசத்த வேதித்தல்”; எனும் பொருள் கொள்ளலாம். பொதுவில் இரசவவாதமுறை இரண்டு நிலைகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. ஒன்று பாதரசத்தைத் திண்மமாக்கி அதை ரசமணி, ரசலிங்கம் போன்ற உருவங்களாகச் செய்தல். மற்றையது மட்டமான உலோகங்களான ஈயம், வெள்ளி, செம்பு, பித்தளை, இரும்பு போன்றவற்றை உயர் உலோகமான தங்கமாக மாற்றுவது ஆகும். இது ஐரோப்பிய சிந்தனையாளர்களின் “பிலாசபாஸ் ஸ்டோனுக்கு”; ஒப்பானதாகும்.

தமிழ் நாட்டில் சித்தர்களே அதிகம் இக்கலையினை ஆய்வு செய்தவர்கள் ஆவர். ஆனால் இவர்கள் பொன் பொருள் ஈட்டும் ஆசையில் இதனைச் செய்யவில்லை. உடலை அழிய விடாமல் காக்கும் “காயகற்பம்” என்ற நிலையினை அடைவதற்கே மேற்கொண்டனர். இவர்கள் கண்ட வாத வித்தையே சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சியாகும். இது இன்றும் சித்த மருத்துவத்தில் முதன்மை பெற்றுள்ளது. காட்டிலும், மலைகளிலும், குகைகளிலும் வாழ்ந்த சித்தர்கள் தங்கள் ஆய்வுகளைப் பல விடயங்களிலும் செலுத்தினர். உலோக வகைகள், உப்பு வகைகள், பாஷாண வகைகள், வேர் வகைகள், பட்டை வகைகள், பிராணிகளின் உடம்பிலே உற்பத்தியாகும் கோரோசனை, கஸ்த்தூரி, சலம், மலம் போன்றவற்றின் குணங்களையும் ஆராய்ந்து கண்டறிந்தனர். இன்று இருப்பதைப் போன்று ஆய்வு கூடங்கள், ஆய்வு உபகரணங்கள், நுட்பமான பரிசோதனை முறைகள் அன்று இல்லாத போதிலும் அவர்களது ஆராய்ச்சிகள் இன்றைய விஞ்ஞான ஆய்வு முறைகளுடன் ஒத்தும் இதனைத் தாண்டியும் இருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது.

சித்த மருத்துவத்திற்காகப் பல உலோகங்களும் உலோக உப்புக்களும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இவையே பாஷாணங்கள் எனப்படுகின்றதன. பாஷாணம் என்பது “விஷம்” எனப் பொருள்படுகின்றது. அதாவது தகுந்த சுத்திகரிப்பு முறையின்றி உட்கொள்ளப்பட்டால் பல்வேறு கொடிய வியாதிகளையும் மரணத்தையும் ஏற்படுத்த வல்லது.

எனவே சித்தர் பாடல்களில் இவற்றிற்கான சுத்திகரிப்பு முறைகளும் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். குணபாடத்தின்படி தாதுப்பொருட்கள் வருமாறு வகை இடப்படுகின்றன. அவை,

1. உலோகங்கள் -தங்கம், வெள்ளி, ஈயம், முதலான எட்டு உலோகங்கள் கூறப்படுகின்றது.

2. உப்புக்கள் – இயற்கை உப்புக்கள் பத்து, செயற்கை உப்புக்கள் பதினைந்து.

3. பாஷாணங்கள் – இயற்கை பாஷாணங்கள் முப்பத்தியிரண்டு, செயற்கைப் பாஷாணங்கள் முப்பத்தியிரண்டு.

4. உபரசங்கள் – நூற்றிரெண்டு தமிழரின் இரசவாதத்தில் பேசப்படுகின்ற உலோகவியல் மற்றும் சித்த மருத்துவம்

குறித்து பல நூல்கள் பேசுகின்ற போதிலும், “சித்தர்களின் இரசவாதக் கலை” எனும் இலக்கியமும் சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது. பண்டைத் தமிழரின் இவ்வாறான இரஸாயன அறிவியல் சிந்தனைகள் மற்றும் சித்த மருத்துவத்தில் இரசவாதத்தின் பயன்பாடு மற்றும் அதன் முக்கியத்துவம், தாதுப் பொருட்களைச் சுத்திகரிக்கும் முறை போன்ற அறிவியல் சார்ந்த விடயங்கள் அதன் முக்கியத்துவம் போன்றன வெளிவராது அரும் பெரும் பொக்கிஷங்களாக மறைந்து காணப்படுகின்றதன. அவற்றைக் வெளிக் கொண்டுவரின் தமிழரின் தனித்துவம் மேலோங்குவதோடு உலக அரங்கில் தமிழரை வியந்து பார்க்கும் நிலை ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இன்றைய தொழில்நுட்ப உலகில் பாரம்பரிய மருத்துவ முறை பின்தள்ளப்பட்டு ஆங்கில மருத்துவ முறைகளே முதன்மையானதாகக் காணப்படுகின்றதன. எனவே ஆங்கில மருத்துவ முறைக்கு நிகரான மருத்துவ தொழில் நுட்பங்கள் நம் பண்டை மருத்துவத்திலும் காணப்படுகின்றது என்பதனை வெளிப்படுத்தல் அவசியமாகிறது.

Medieval Chemistry
Medieval Chemistry

இரசவாதக் கலையானது இந்தியாவிலிருந்தே பிற தேசங்களுக்கு பரவலாக்கம் பெற்றது. குறிப்பாக அரபு, கிரேக்கம், சீனம், பாரசீகம் என்பவற்றைக் கூறலாம். ஆனால் தற்காலத்தில் திரிபடைந்து அரேபியர்களிடமிருந்து இரசவாதக்கலை இந்தியாவிற்கு வந்ததாகக் கூறப்படுகின்றது. எனவே இக்கலை எமது முன்னோர்களுக்கே உரித்துடையது என்பதை நாம் அறிந்து அதனைப் பேணுவது சிறப்பு.மக்கள் மத்தியில் இரசவாதக்கலை செல்வாக்கிழந்து காணப்படுவதோடு தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகின்றது.

இக்கருத்தை மாற்றியமைத்து அதன் உண்மை நிலையினை எடுத்துரைப்பது காலத்தின் கட்டாயமாகிறது. இரசவாதக் கலைக்கு சித்த புருஷர்கள் ஆற்றிய பங்களிப்பு மகத்தான ஒறன்றாக் காணப்படுகின்றது. சித்தர்கள் தங்கள் இறை ஞானத்தால் கண்டறிந்த அரிய கலைகளில் இரசவாதமும் ஒன்றாகும். இது 64 கலைகளில் ஒன்றாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இரசவாதம் என்பது ஒரு உலோகத்தை மற்றுமொரு உலோகமாக மாற்றும் கலையாகும். இரசவாதம் எனும் சொல்லுக்கு ‘இரசத்தை வேதித்தல்’ எனப் பொருள் கொள்ளலாம். இரசவாதம் என்பது இரசத்தின் மாறுதல்களை அறிவது எனப்படுகிறது.

மருத்துவ முறையில் வரும் மிக முக்கயமான அம்சம் வாதமாகும். வாதம் மூலமாகவே மருந்துகளை தயாரிக்க முடியும். வாதம் என்பதற்கு மாறுபடுதல் என்பதே பொருள். வேதித்தல் எனும் சொல்லின் திரிபே வாதம். நம்மைச் சுற்றிலும் உள்ள இயற்கைப் பொருட்கள் ஒவ்வொன்றும் மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்த மாற்றங்கள் எப்படி உருவாகின்றன என ஆராய்வதே வாதம். ஒவ்வொரு பதார்த்தங்களின் பண்புகளையும் ஆராய்வதே வாதம். நம் நாட்டு சித்தர்கள் கண்ட ரசவாதம் பண்டங்களைப் பற்றிய ஆராய்ச்சி ஆகும் என்கிறார் சாமி சிதம்பரனார்.

மருந்துகளில் ரசம் முன்மையானது. இதன் மூலம் இரசபஸ்மம், இரச செந்தூரம்,ரசக்கட்டு முதலிய மருந்துக்கள் தயாரிக்கப்பட்டன. தீராத பல கொடிய நோய்களுக்கு இம் மருந்துகள் தீர்வாக அமைகின்றன. மாறுதல்களை அறிவது என்ற பொருளில் தமிழ் பேரகரமுதலி இரசவாதம் என்பதற்கு, “உலோகங்களைப் பேதிக்கச் செய்யும் வித்தை, ‘பொன்னாக்கல்’ எனும் இரு அர்த்தங்களைத் தருகின்றன.

The Philosapher’s Ston
The Philosapher’s Ston

இரும்பு, செம்பு, பாதரசம் போன்றவை பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பனவற்றின் தாக்குதலுக்கு உட்பட்டு மெல்ல மெல்ல அணுக்கள் சிதைவடைந்து அழிந்துகொண்டிருக்கும் உலோகங்கள் ஆகும். ஆனால் தங்கம் மட்டும்தான் பஞ்சபூத சக்திகளின் தாக்குதலுக்கு உட்படாமல் நிற்கும் உலோகமாகும். எனவேதான் சித்தர்கள் இரசவாத ஆய்வினில் தாழ்ந்த நிலையிலுள்ள உலோகங்களை உயர்ந்த உலோகமான தங்கமாக மாற்றும் இரகசியங்களைக் கண்டறிந்தனர். தமிழரின் இரசவாத வேலை ஆண், பெண் கொள்கைகளைக் கொண்டது. விந்து, நாதம், வித்தியாசமானது. சித்த Ideology. இதனூடாக ஆண் – பெண் குறியீட்டினூடாகப் பார்க்கப்படுகின்றது. புனேரூ என்பது ஆண்-பெண் தலைமையினுடைய முடிவுகளைச் சொல்கின்றது. இந்தச் செயன்முறையில் ‘மூப்பு’ என்பதன் பங்கு ஒரு விஷேட கவனம் கொண்டதாக் காணப்படுகின்றது. விஷ வில்லைகள், தயாரிக்கும் போது அதிகளவான சக்தியை உள்ளெடுக்கின்றது. இதனைப் பொதுவாக இந்தியன் வேசன்  “The Philosapher’s Ston” என்பதனூடாக இது விளக்கப்படுகின்றது. இது இருவிதமான தொழிற்பாட்டைக் கொண்டுள்ளது.

1) அடிப்படை உலோகங்களைத் தங்கமாக்கல்.

2) மனித செயற்பாட்டை இளமையாகப் பேணுவது என்பவையாகும்.

மூப்பு என்பது சித்த செயற்பாட்டில் நான்கு வகையாகக் குறிப்பிடப்படுகின்றது.

1) வேதா மூப்பு    

2) வைத்தியா மூப்பு

3) யோகா மூப்பு  

 4) காணானா மூப்பு.

இவற்றில் வேதாமூப்பு தென் இந்திய இரசவாதக் கலையினாரால் செய்யப்படுகின்றது.

வைத்தியா மூப்பு என்பது ஒரு மருந்து. யோகா மூப்பும், கணானா மூப்பும் குறிப்பிடப்பட்ட முறையில் சொல்ல முடியாது. எல்லாவற்றையும் உள்ளடக்கியது. இவை கூடியளவு ஒரு மதத்தினைப் பின்பற்றுவதாக உள்ளது. மேலும் இது எதனை விளக்குகிறது எனின், யதாமூப்ப எனும் Magical Powers உடன் தொடர்புடையது என்பதாகும். இரசவாதத்தில் முக்கிய பங்கு வகிப்பது ரசம் ஆகும். பாதரசம் என்பது

திண்மமும் திரவமும் அற்றதொரு மூலகம் ஆகும். தொட்டால் கையில் அகப்படாதது. இரசமணி என்பது பாதரசத்தினை மணியாகக் கட்டி நிறுத்துவதாகும். மோலான பொருள் இது. நோய் தீர்ப்பதிலிருந்து அட்டமாசித்து வரை அனைத்துக்கும் உதவக்கூடியது.

இந்திய ரசவாதக் கலை பற்றிய பெரும்பான்மையான கட்டுரைகள் Arion Rosy என்பவரால் எழுதப்பட்டுள்ளன. அத்தோடு வரலாறு பற்றி G.Janmeulen benbelds என்பவர் எழுதிய “A History of Indian Medical Literature Vol.5” என்பது Groning என்பவரால் 1999-2003ம் ஆண்டு காலப் பகுதியில் நெதர்லாந்தில் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய இரசவாதமானது மிகவும் திறமையான வரலாற்றுப் பாடமாக இந்தியாவில் உள்ளது என Satya Prakash’s என்பவரால் “Pracin Bharam Men Rasayan Kavikas” எனும் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பிறநாட்டவரால் வியந்து போற்றப்படும் இரசவாத வித்தை நமது சித்தர்களால் சிறப்பு நிலையில் பேணப்பட்ட ஒன்றாகும். இன்றைய காலத்தில் மங்கிய நிலையில் இருக்கும் இத்தகு அபூர்வக் கலைகளை உரிய முறையில் அறிந்து உலகம் உய்ய அதனைப் பயன்படுத்தல் முறையாகும்.

தொகுப்பாக்கம் : யரனியா.R