பண்டிகைக் காலத்தில் மீன்களின் விலை கட்டுப்பாட்டில்

பண்டிகைக் காலத்தில் மீன்களை நியாய விலையில் விற்பனை செய்ததால், சந்தையில் மீன் விலை ஸ்திரமட்டத்தை எட்டியதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் புத்தாண்டு காலத்தில் மீன்களை நியாய விலையில் விற்பனை செய்திருந்ததாக அவர் கூறினார்.

முன்னைய ஆண்டுகளில் பண்டிகைக் காலம் பார்த்து வர்த்தகர்கள், மீனவர்கள் மீன் விலையை உயர்த்தியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் நுகர்வோருக்கு ஏற்பட்ட சிரமங்களை கருத்தில் கொண்டு இம்முறை மீன் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

இம்முறை ஆகக் கூடுதலாக நுகரப்படும் நான்கு வகை மீன்களை குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]