பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் அஞ்சல் ஊழியர்கள்

முறையான ஆட்சேர்ப்பு கொள்கையொன்றை தயாரிக்காவிட்டால், தொடர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க உள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஆட்சேர்ப்பு கொள்கையை தயாரிக்காவிட்டால் அன்றைய தினம் நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

ஏனைய தொழிற்சங்களுடன் இணைந்து நேற்று நடத்திய கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய, அஞ்சல் திணைக்களத்தின் 21 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.