பணிக்கு சமூகமளிக்காத 11 ஆயிரத்துக்கும் அதிகமான இராணுவ வீரர்கள் பணி நீக்கம்

பணிக்கு சமூகமளிக்காத 11 ஆயிரத்துக்கும் அதிகமான இராணுவ வீரர்கள் பணி நீக்கம்

பணிக்கு சமூகமளிக்காத 11 ஆயிரத்துக்கும் அதிகமான இராணுவ வீரர்கள் உத்தியோகபூர்வமாக பணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சேவையில் சமூகமளிக்காத மற்றும் சேவை விடுவிப்பை பெற்றுக்கொள்ள விரும்பும் இராணுவ வீரர்களுக்காக கடந்த ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல் இந்த மாதம் 22 ஆம் திகதிவரை பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்போது 15 உயர் இராணுவ அதிகாரிகள், 09 கெடட் அதிகாரிகள் உட்பட 11 ஆயிரத்து 232 பேர் தமது உத்தியோகபூர்வ சேவை விடுவிப்பை கோரியுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த வருடம் ஆகஸ்ட் 19 ஆம் திகதிவரை ஒன்பது இராணுவ அதிகாரிகளும் 5 ஆயிரத்து 642 ஏனைய வீரர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த வருடத்தில் பொது மன்னிப்பின் அடிப்படையில் ஒன்பதாயிரம் முப்படையினர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]