பணவீக்கம் அதிகரிப்பு

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்ட வேகத்திலேயே, பணவீக்கமும் அதிகரித்துள்ளதாகத் தெரியவருகிறது.

கடந்த ஒக்டோபர் மாதம் நூற்றுக்கு 5 சதவீதமாக இருந்த பணவீக்கம், நவம்பர் மாதம் 4.1 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.

இதேபோன்று, டிசெம்பர் மாதத்தில் 4.2 சதவீதமாக பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

increase in inflation

டிசெம்பர் மாதம் உயர்வடைந்த பணவீக்கம் காரணமாக, அரிசி, தேங்காய், தேங்காயெண்ணெய் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை, அதிகரிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

வீட்டு உபகரணங்கள், வீட்டு பராமரிப்பு பொருட்கள், வாகனங்கள், புடைவ, காலனி மற்றும் உணவு பொருட்கள் அல்லாத பொருட்களின் விலைகள், கடந்த டிசெம்பர் மாதம் அதிகரித்திருந்ததாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.