பணம் வாங்கி ஏமாற்றிய ஒப்பந்தக்காரர் கைது

பணம்

37 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவினைப் பெற்று மோசடி செய்த கட்டட ஒப்பந்த நிறுவனமொன்றின் உரிமையாளரை, மொனராகலை விசேட குற்றப்புலனாய்வு துறையினர் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உடவலவைப் பகுதியில் உல்லாச விடுதியொன்றினை நிர்மாணிக்கும் பொருட்டு, உரிமையாளரிடம் இருந்து முப்பத்தேழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவினை முற்பணமாக, கட்டட ஒப்பந்தக்காரர் பெற்றுள்ளார்.

ஆனால், அவ் ஒப்பந்தக்காரர் விடுதியை நிர்மாணிக்காமல், பெற்ற பணத்தை மோசடி செய்துள்ளார். இது குறித்து செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில் கட்டட ஒப்பந்தக்கார் கைது செய்யப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டட நிர்மாணப்பிற்கு முற்பணம் பெற்ற நபர், நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்காத நிலையில், உரிமையாளர் பணத்தை கேட்டுள்ளார். 3 தவணைகளில் பணத்தை தருவதாக தெரிவித்த ஒப்பந்ததக்காரர் காசோலைகளை வழங்கியுள்ளதுடன், வங்கிகணக்கில் பணமில்லாமல் காசோலைகள் செல்லுபடியற்றதாகிவிட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.