பணத்திற்காக பெற்ற மகளை பலாத்காரத்திற்கு விற்ற கொடூர தாய்- ஹரியானா மாநிலத்தில் சம்பவம்

தாயொருவர் பணத்திற்காக தனது 15 வயது மகளை பலாத்காரம் செய்ய அனுமதித்துள்ள சம்பவம் ஹரியானா மாநிலத்தில் நடந்துள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் அனிதா (45). இவர் தனது 15 வயது மகளை கோவிலுக்கு அழைத்து செல்வதாக கூறி கூட்டி சென்றுள்ளார்.

பின்னர் அஜய் என்பவருடன் தனது மகளை சந்திக்க வைத்துள்ளார். இதையடுத்து அஜய் தனது வீட்டுக்கு சிறுமியை அழைத்து சென்ற நிலையில், அங்கு அஜயுடன் மூவர் சேர்ந்து குறித்த சிறுமிமை பலாத்காரம் செய்துள்ளனர். இதற்காக அஜய், சிறுமியின் தாயிடம் ரூ.1000 கொடுத்துள்ளார்.

இதையெல்லாம் தனது உறவுக்கார பெண்ணிடம் சிறுமி கூறிய நிலையில், இது குறித்து அவர் பொலிசில் புகார் அளித்தார்.

பொலிசார் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் தனது வீட்டருகில் உள்ள தில்பவ் சிங் என்பவரும் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக கூறினார்.

இதையடுத்து சிறுமியின் தாய் அனிதா, அஜய், தில்பவ் ஆகிய மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும் அஜயுடன் இருந்த மூன்று பேரை தேடி வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]