பணத்திற்காக தாயை சரமாரியாக தாக்கிய மகனுக்கு நேர்ந்த கதி

கொடுத்த பணத்தினை கேட்டு தனது தாயைத் தாக்கி காயப்படுத்திய மகனொருவரை அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க நேற்று உத்தரவிட்டார்.

திருகோணமலை- காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் தான் உழைத்து சேகரித்த ஒரு இலட்சம் ரூபாய் பணத்தினை தாயிடம் கொடுத்துள்ளார்.

பின்பு அப்பணத்தினை தாயிடம் கேட்ட போது பணம் இல்லை என்று கூற தாயின் தலையிலும், கையிலும் சரமாரியாக தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸர் தெரிவிக்கின்றனர்.

அயலவர்கள் பொலிஸ் அவசர தொலைபேசி எண்ணுக்கு அழைத்து, மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரை கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவானின் வாசஸ்தலத்தில் நேற்று ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சந்தேக நபரின் தாயார் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]