பட்டுவேஷ்டியுடன் திருப்பதி கோவிலில் மஹிந்த ராஜபக்ச சாமி தரிசனம்!

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று திருப்பதிக்கு வந்த இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை வி.ஐ.பி தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார்.

பெங்களூரில் இருந்து நேற்று மதியம் சிறப்பு விமானத்தில் ரேனிகுண்டா விமான நிலையத்திற்கு வந்த மஹிந்த ராஜபக்ச அங்கிருந்து கார் மூலம் திருப்பதி மலைக்கு சென்றார். திருப்பதி மலையில் இரவு தங்கிய அவர் இன்று காலை கோவிலுக்கு சென்று வி.ஐ.பி தரிசனத்தில் ஏழுமலையானை கும்பிட்டார்.

அவருக்கு தேவஸ்தான வேத பண்டிதர்கள் ஏழுமலையான் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் வேத ஆசி வழங்கினர். தேவஸ்தானம் சார்பில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள்,நினைவு பரிசுகள் ஆகியவற்றை வழங்கினர்.

ஏழுமலையானை தரிசித்த பின்னர் திருப்பதி மலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராஜபக்ச இலங்கை அரசியலில் நாங்கள் தற்போது ஏறுமுகத்தில் இருக்கிறோம்.இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சந்திக்கும் பிரச்சனை பற்றிய கேள்விக்கு,இரண்டு தரப்பிலும் பேசி மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]