பட்டாசு கொளுத்துபவர்களின் முக்கிய கவனத்திற்கு – தவறி கூட இந்த தப்ப பன்னாதீங்க!!

தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பட்டாசு கொளுத்துபவர்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் திடீர் விபத்து பிரிவு பயிற்சி வழங்கும் தாதி அதிகாரி இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பட்டாசு கொளுத்தும் போது உரிய பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றுமாறு அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

தேவையற்ற பிரச்சினை மற்றும் மதுபாவனை குறைப்பு போன்ற செயற்பாடுகள் மூலம் திடீர் விபத்துக்களை தவிர்த்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.