பட்டம்விட சென்ற சிறுவனுக்கு ஏற்பட்ட பரிதாபம்

பட்டம்விட சென்ற சிறுவன் மரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை – சோனகவாடி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

பாடசாலையில் வைத்து நண்பர்களுடன் சேர்ந்து பட்டமிட்டுக்கொண்டிருந்த போது, பட்டம் மரத்தில் சிக்கியதால், அதனை எடுக்கச் சென்ற போதே அவர் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அச் சிறுவன், நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளார்.

தலையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக சிறுவன் உயிரிழந்ததாக திருகோணமலை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]