படுகொலை வெளியான அதிர்ச்சி தகவல்கள்

இலங்கை கிரிக்கட் அணியின் துடுப்பாட்டவீரர் தனஞ்சய டீ சில்வாவின் தந்தை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், C.C.T.V காணொளி ஊடாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை நிற மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களால் நேற்று முன்தினம் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், குறித்த இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் பாதாள உலகக் குழுவினர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, தனஞ்சய டி சில்வாவின் மூத்த சகோதரரான சவித்ர டி சில்வாவிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக கல்கிஸ்ஸை காவல்நிலையத்தின் குழுவொன்று சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்த தனஞ்சய டி சில்வாவின் மூத்த சகோதரர் சவித்ர டி சில்வா, பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அவ்வாறானதொரு தகவலை பொலிஸாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டில் குறிப்பிட்டிருக்கவில்லை என காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]