முகப்பு News Local News படுகொலை செய்யப்பட்ட கிரிசாந்தி குமாரசுவாமியின் 22வது நினைவுதினம் அனுஷ்டிப்பு

படுகொலை செய்யப்பட்ட கிரிசாந்தி குமாரசுவாமியின் 22வது நினைவுதினம் அனுஷ்டிப்பு

kirushanthini

படுகொலை செய்யப்பட்ட கிரிசாந்தி குமாரசுவாமியின் 22வது நினைவுதினம் அனுஷ்டிப்பு

யாழ்.செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் பாலியல் வன்புணர்விற்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி கிரிசாந்தி குமாரசுவாமியின் 22வது நினைவுதினம் இன்று (07) யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.

செம்மணி படுகொலை நினைவேந்தல் பேரவையின் ஏற்பாட்டில், அதன் தலைவர் ஞா. கிஸோர் ஏற்பாட்டில், வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்ற இன்று காலை (07) 9.00 மணியளவில் ஆரம்பமாகியது.

இரண்டு நிமிட மௌன அஞ்சலியின் பின்னர் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் பொது ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, வடமாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் , பா.கஜதீபன், கே.சயந்தன், ஆர்;. ஜெய்சேகரம், உட்பட பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் கிரிசாந்தியின் உடலை புதைத்த இடத்தினை கண்டு பிடிக்க உதவிய ஆசிரியர் பொது மக்கள் எனப்பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

இதன்போது, கிரிசாந்தியைத் தேடிச் சென்ற போது படுகொலை செய்யப்பட்ட கிரிசாந்தியின் தாய் மற்றும் சகோதரனுக்கும், உறவினருக்கும் இதன்போது அஞ்சலி செலுத்தப்பட்டது.

இறுதியாக கிரிசாந்தியின் நினைவாக 40 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

1996 ஆம் ஆண்டு பாடசாலை மாணவி கிரிசாந்தி குமாரசுவாமி இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com