படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினம் இன்று யாழில் அனுஸ்டிப்பு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினமானது இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ் பல்கழைகழகத்தின் இன்று நண்பகல் பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர் கிருஸ்ணமேனன் தலமையில் இவ் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது நிகழ்வில் யாழ்.பல்கலைகழக துனைவேந்தர் விக்கினேஸ்வரன் சுடரேற்றி மலர் அணிவித்து அஞ்சலி செலுத்தியிருந்தார்.

அதனை தொடர்ந்து யாழ்.பல்கலைகழக ஊடகத்துறை விரிவுரையாளர் கலாநிதி ரகுராம் மற்றும் ஏனைய விரிவிரையாளர்கள் மாணவர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இறுதியாக கலாநிதி ரகுராம் அஞ்சலி நினைவுரையாற்றியிருந்தார். இதன்போது கருத்து சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்பாக பணியாற்றியவர் எனவும், அவர் காட்டிய வழியில் ஏனைய ஊடகவியலாளர்களும் பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]