படித்தது 5ஆவது….வாங்கும் சம்பளம் ஆண்டுக்கு ரூ 21 கோடி

படித்தால் மட்டும் தான் வாழ்க்கையில் சாதிக்கலாம் என்ற கோட்பாட்டை தவிடு பொடியாக்கியிருக்கிறார் தர்மபால் குலாத்தி என்ற 94 வயது முதியவர். எம்டிஎச் மசாலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வரும் இவரின் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா ? சொன்னா சும்மா அசந்திடுவீங்க, வெறும் 21 கோடி ரூபாய்களாம். ஆனால், இவர் 5ஆவது வகுப்பு வரை மட்டும் தான் படித்திருக்கிறார் என்பது தான் இதில் உள்ள சுவாரஷ்யம்.

mds masala

Mahashiya Di Hatti

எம்டிஎச் மசாலா நிறுவன ஊழியர்களால் தாதாஜீ அல்லது மஹாஷியாஜி என்று அழைக்கப்படும் இவரோட வேலையே, தினமும் நிறுவனத்தைச் சுற்றி வருவது, சந்தை விற்பனையாளர்கள் மற்றும் டீலர்களை ஞாயிற்றுக் கிழமை என்றும் பார்க்காமல் சந்தித்துப் பேசுவது இவைதானாம்.

துபாய், லண்டன் என வெளிநாடுகள் வரை தன் கிளையை பரப்பியுள்ள எம்டிஎச் மசாலா நிறுவனத்தின் 80 சதவீத பங்குகள் தர்மபால் குலாத்தி கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. குறைந்த விலையில் நல்ல தரமான பொருட்களை அளிப்பதே எனது நோக்கம் என்றும் என்னுடைய சம்பளத்தில் இருந்து 90 சதவீதம் அறக்கட்டளைக்கு அளிப்பதாகவும் கூறுகிறார் இந்த படிக்காத அறிவாளி.