முகப்பு News Local News படம் பார்ப்பதற்கு முன்னர் தேசிய கீதம் கட்டாயம்

படம் பார்ப்பதற்கு முன்னர் தேசிய கீதம் கட்டாயம்

திரையரங்குகளில் திரைப்படங்களை ஒளிபரப்புவதற்கு முன்னதாக தேசிய கீதம் ஒலிப்பதை கட்டாயப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பினரால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், திரைப்படங்களை விநியோகிக்கும் அதிகாரம் நீதிமன்றத்தின் ஊடாக தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட்ட பின்னர், தேசிய கீதம் இசைப்பது கட்டாயமாக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, சம்பிரதாயபூர்மான முறையில் சில திரையரங்கங்களில் தேசிய கீதம் ஒலிக்கவிடப்படுகின்றது எனினும், நாட்டில் உள்ள சகல திரையரங்கங்களிலும் இந்த நிலை காணப்படுவதில் என்றும் கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com