படகு விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

கினிகத்தேனை யடிபேரிய பிரதேசத்தில் களனி கங்கையில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

23 வயதுடைய கடுவெல்லேகம மினுவாங்கொட பகுதியை சேர்ந்த கனிஷ்க டில்ஷான் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர், மொரட்டுவ பல்கலைகழகத்தின் பொறியியல் பீட மாணவன் என தெரியவந்துள்ளது.

பல்கலைகழகத்திலிருந்து தனது நண்பர்களுடன் கித்துல்கலவுக்கு சுற்றுலா சென்றிருந்த போது, படகில் சவாரி செய்த இவர் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

இளைஞரின் சடலம் கிதுல்கல வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]