படகு கவிழ்ந்ததில் நால்வரை காணவில்லை

அம்பாறை, தமண, எக்கல் ஓயா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

பாடசாலை அதிபர் ஒருவர் உள்ளிட்ட நால்வரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

இந்தநிலையில் காணாமல் போனவர்களை மீட்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, திருகோணமலை கடற்பகுதியில் நீராடச் சென்று, நீரில் அடித்துச் செல்லப்பட்ட 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 2 சிறுவர்கள், 3 பெண்கள் மற்றும் நோர்வேயைச் சேர்ந்த பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]