படகுகள் பறிமுதல் தொடர்பில் ஆராய இந்திய மீட்புக் குழு இலங்கைக்கு விஜயம்

படகுகள் பறிமுதல் தொடர்பில் ஆராய இந்திய மீட்புக் குழு இலங்கைக்கு விஜயம்

படகுகள் பறிமுதல் தொடர்பில் ஆராய்வதற்காக இந்தியாவிலிருந்து மீட்புக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீனவ படகுகளின் நிலை குறித்து ஆராய்வதற்காவே குறித்த குழு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கடற்படையினரால் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து படகுகளையும் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில்  குறித்த உத்தரவானது, கடந்த வாரம் இந்திய கடற்றொழிலாளர் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

அதன்படி, மீனவப் படகுகளின் நிலை குறித்து ஆராயும் வகையில் மீனவர்கள், இயந்திரவியலாளர் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக இராமநாதபுரம் மீன்வளத்துறை கூடுதல் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் அனுமதி கிடைக்கப் பெற்றதன் பின்னர் இக்குழு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஒவ்வொன்றும் தலா 23 இலட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் பெறுமதியானவை எனவும் கூறப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]