பஞ்சு மரத்தில் ஏறியவர் பலி

பஞ்சு மரத்தில்

பஞ்சு மரத்தின் கிளையொன்றை வெட்டிக்கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்குதலுக்கு உள்ளான ஒரு பிள்ளையின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.

தெனியாய, வரல்ல யோல்ட்டா தோட்டத்தைச் சேர்ந்த பரமசிவம் ஜயமோகன் என்ற 28 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தோட்டத் தொழிலாளியான அவருக்கு, 3 வயதுடைய பெண் பிள்ளையொன்று இருப்பதுடன், அவருடைய மனைவி, 2 மாதக் கர்ப்பிணி என தெரிவிக்கப்படுகின்றது.

தன்னுடைய வீட்டுக்கு சற்றுத்தூரத்தில் உள்ள பஞ்சுமரமொன்றின் கிளையை குறித்த நபர், சனிக்கிழமை மாலை வெட்டிக்கொண்டிருந்துள்ளார்.

அதன்போது, அக்கிளை சரிந்து, அதி சக்திக்கொண்ட மின்கம்பியில் மோதியுள்ளது. வெட்டப்பட்ட கிளையின் ஊடாகக் கடத்தப்பட்ட மின்சாரம், அவரைத் தாக்கியுள்ளது.

மரத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட அவர், சுமார் 40 அடி உயரத்திலிருந்து, மரத்துக்கு கீழே இருந்த பாறையொன்றின் மீது தலைகீழாக விழுந்துள்ளார்.

படுகாயமடைந்த நபரை, மொறவக்க வைத்தியச்சாலைக்கு பொதுமக்கள் கொண்டு சென்ற நிலையில், அங்கு அனுமதிக்கப்பட்ட பின்னர், இளைஞர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில், தெனியாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]