பஞ்சு போன்ற கைகள் வேண்டுமா? சில டிப்ஸ் இதோ!..

கைகள் சொரசொரப்பாக இருந்தால் பார்க்கவே சகிக்காது. பஞ்சு போன்ற கைகளுக்கு கடைகளில் கிடைக்கும் கிரீம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையான இந்த முறைகளை பின்பற்றலாமே!.

  • கைகளின் மென்மைக்கு தேன், எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவைகளை உபயோகிக்கலாம்.
  • பால் கைகளின் மென்மைக்கும் பளபளப்புக்கும் ஏற்றது. பாலை வெதுவெதுப்பாக காய்ச்சி அதில் கைகளை 5 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ கைகள் மென்மையாகும்.
  • எலுமிச்சை தோலினை நன்றாக கைகளின் மீது தேய்க்க சொரசொரப்பு நீங்கி சருமம் மென்மையாகும்.
  • கடல் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கைகளில் தேய்க்க கைகளில் கருமை நிறம் இருந்தால் மாறிவிடும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]