பசுமையான உலகைப் பேணுவோம் எனும் கருப்பொருளில் துணியிலான பைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

பசுமையான உலகைப் பேணுவோம் எனும் கருப்பொருளில் துணியிலான பைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பசுமையான உலகைப் பேணுவோம்

பசுமையான உலகைப் பேணுவோம் எனும் கருப்பொருளில் பொலித்தீன் பாவனையைக் குறைக்கும் வகையில் செங்கலடி மத்திய கல்லூரியினால் துணியிலான பைகள் இன்று (02) வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் கடந்த நாட்களில் சுற்றுச் சூழலில் குப்பைகளினால் ஏற்பட்ட பலவிதமான அசௌகரியங்களுக்கு பொலித்தீன், ரெஜிபோம், சொப்பிங் பேக் ஆகியவையும் முக்கிய காரணமாகயிருந்து. இதனைத் தடுக்கும் வகையில் செப்டம்பர் மாதம் முதல் பொலித்தீனுக்குத் தடையென்று அறிவிக்கப்பட்டது.

பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்தி சூழலைப் பேணும் நோக்கில் துணியிலான பைகள் தயாரிக்கப்பட்டு மாணவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொலித்தீன் மாசடைதல் மற்றும் விலங்குள் உட்கொள்வதால் உயிரிழக்கும் நிலை அதிகரித்துக்கொண்டு செல்கிறது. இதனைக் கருத்திற்கொண்டு செங்கலடி மத்திய கல்லூரி முதல்வர் கு.அருணாசலம் அவர்களின் வழிகாட்டலில் ஆசிரியர் வேல்முருகு குகதாசன் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலக்கம் 17/1405/704/022 இன் கீழ் வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஜுலை மாதம் 11 ஆம் திகதி அமைச்சரவையால் முடிவு செய்யப்பட்ட தீர்மானத்தின்படி செப்டம்பர் மாதம் முதல் மைக்ரோன் 20 க்கு சமமான அல்லது அதற்குக் குறைவான அடர்த்தி கொண்ட பொலித்தீன் பாவனை, விற்பனை மற்றும் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]