பசிலுக்கு எதிரான கூட்டு எதிரணியினர் மஹிந்தவிடம் முறைப்பாடு

பசில் ராஜபக்ச

உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஆசனப்பங்கீட்டில் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ நியாயமற்ற முறையில் நடந்து கொள்வதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முறையிடப்பட்டுள்ளது.

கூட்டு எதிரணியில் இடம்பெற்றுள்ள எட்டு அரசியல் கட்சிகள் இந்த முறைப்பாட்டை மஹிந்தவிடம் செய்துள்ளன.

மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாசக் கட்சி, தேச விடுதலை மக்கள் கட்சி ஆகிய எட்டுக் கட்சிகளுமே, பசில் ராஜபக்ஷ தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளன.

மலர் மொட்டு சின்னத்தைக் கொண்ட, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு அதிகளவு வேட்புமனுக்களில் அதிகளவு இடங்களை ஒதுக்கி, ஏனைய கட்சிகளுக்கு அநீதி இழைப்பதாக இந்தக் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இதையடுத்து, தமது அணியின் மூத்த தலைவர்களான குமார வெல்கம மற்றும் சி.பி.ரத்னாயக்க ஆகியோரிடம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் பொறுப்பை மகிந்த ராஜபக்ஷ ஒப்படைத்துள்ளார்.

இவர்கள், நேற்று தொடக்கம் வேட்புமனுக்களில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதா என்று மாவட்ட ரீதியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]