பங்களாதேஷை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது இந்தியா

ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பங்களாதேசை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

நேற்று பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய பங்களாதேஷ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 264 ஓட்டங்களை பெற்றது. இதில் தமீம் இக்பால் அணியின் அதிகபட்ச ஓட்டமாக 70 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் புவேனேஷ்வர் குமார், பும்ரா, யதாவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

265 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி, 40.1 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. 123 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றிக்கு வழி வகுத்த ரோஹித் சர்மா போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]