பங்களாதேஷிடம் படு தோல்வியடைந்த இலங்கை அணி

பங்களாதேஷிடம் படு தோல்வியடைந்த இலங்கை அணி

ஆசிய போட்டிகள் இன்றுடன் ஆரம்பமாகியது. முதல் போட்டியில் இலங்கை அணியானது பங்களாதேஷை எதிர்கொண்டது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. ஆட்டத்தின் முதலாவது ஓவரை வீசிய மலிங்காவின் அபாரப் பந்துவீச்சில் 2 விக்கெட்டுக்களை இழந்தது பங்களாதேஷ் அணி.

தமீம் இக்பால் காயம் காரணமாக வெளியேறினார். நிதானமாக ஆட்டத்தை தொடர்ந்த ரஹீம் மற்றும் மிதுன் சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினர். மிதுன் 63 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரஹீம் கடைசி ஒவரில் 144 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பங்களாதேஷ் அணியினர் 49.3 ஓவர்களின் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 261 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் மலிங்கா 4 விக்கெட்டுகளையும், தனஞ்சய சில்வா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

262 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது.

35.2 ஓவர்களின் முடிவில் இலங்கை அணியினர் சகல விக்கெட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக டில்ருவான் பெரேரா 29 ஓட்டங்களையும், தராங்க 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கையணியானது 135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]