பகலில் நைட்டி அணிந்தால் 2 ஆயிரம் ரூபா அபராதம்- தகவல் வழங்குவோருக்கு 1000 ரூபா சன்மானம்….

ஆந்திராவிலுள்ள ஒரு கிராமத்தில் வட்டி என்ற இனத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் பகலில் நைட்டி அணிந்தால் 2 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என்றும் தகவல் கொடுப்பவருக்கு 1000 ரூபா சன்மானம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் இரவில் தூங்கும் போது அணிந்துகொள்வதற்காக கண்டறியப்பட்ட இலகுவான உடையான நைட்டியை தற்போது பெரும்பலான பெண்கள் பிரதான உடையாக மாற்றிக்கொண்டு பகல் நேரங்களிலும் அதனை அணிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தோகலபள்ளி என்கின்ற கிராமத்தில் பெண்கள் பகலில் நைட்டி அணிய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த கிராமத்தில் வட்டி என்ற இனத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்ற நிலையில், அந்த இனத்தை சேர்ந்த 9 பேரை வட்டி இனத்தின் தலைவர்களாக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

அந்த வகையில், தோகலபள்ளி கிராமத்தில் உள்ள பெண்கள் பகலில் அதாவது காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நைட்டி அணிய வட்டி இன தலைவர்கள் தடை விதித்துள்ளனர்.

அதனை மீறி பகலில் நைட்டி அணியும் பெண்கள் ரூ.2 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் பெண்கள் பகலில் நைட்டி அணிந்திருப்பதை பார்க்கும் நபர் வட்டி இன தலைவர்களுக்கு அதனை தெரியப்படுத்தினால் அவருக்கு ரூ.1000 சன்மானமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை விரும்பாத அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் சிலர் இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கு அண்மையில் தெரியப்படுத்தினர்.

அந்த கிராமத்துக்கு சென்று விசாரித்த போது, அங்குள்ள யாரும் வட்டி இன தலைவர்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்க முன்வரவில்லை என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]