நோர்வே இராஜாங்க அமைச்சர் இலங்கைக்கு இன்று வருகிறார்

நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வரவுள்ளார்.

நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென்ஸ் புரோலிக் ஹொல்ட் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வரவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது, சிரேஷ்ட அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து வெளிவிவகார இராஜாங்க அமைச்சர கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வே தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்தல், இருதரப்பு ஒத்துழைப்பு, சூழலியல் சவால்கள், மற்றும் கடல் சார் தொழில் துறைகளை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது, அவதானம் செலுத்தப்படும் என நோர்வே தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]