நோர்வூட் பிரதேசத்தில் லொறி விபத்து

நோர்வூட்

ஹட்டன் – நோர்வூட் பிரதான வீதியில் டிக்கோயா நகரத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று காலை 5 மணியளவில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் சாரதியும், உதவியாளரும் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனை பகுதியிலிருந்து நோர்வூட் பகுதிக்கு மணல் ஏற்றிச் சென்று மீண்டும் மஹியங்கனை நோக்கி சென்று கொண்டிருந்த லொறியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொறியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து, இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]