நோர்தன் பவர் தனியார் நிறுவனத்தின் மீளாய்வு மனு தள்ளுபடி  

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைவு தொடர்பாக, நோர்தன் பவர் தனியார் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

நீர்மாசடைதலினால் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் குழுவைச் சேர்ந்த கே.வி.எஸ்.கணேசராஜன் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த வழக்கை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்திற்கு மீண்டும் பாரப்படுத்தியுள்ளதுடன், மத்திய சுற்றாடல் அதிகார சபையை ஒரு கட்சித் தரப்பாக குறித்த வழக்கில் சேர்ப்பதற்கும், கட்சிக்காரரின் சம்மதத்துடன் குறித்த நிறுவனத்தின் இயந்திரங்களை பராமரிப்பதற்கு ஏதுவான நடவடிக்கையை நீதவான் நீதிமன்றத்தின் மூலம் முன்னெடுக்க வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளது .

சுன்னாகம் மின்னுற்பத்திசாலையின் தொழிற்பாடுகளை மீள ஆரம்பித்தல் மற்றும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட கட்டளையை தள்ளுபடி செய்தல் ஆகிய கோரிக்கைகள் இந்த மனுவில் முன்வைக்கப்பட்டிருந்தன.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]