நொச்சியாகம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை!

நேற்று மாலை நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பிரதேசத்தில் தாய் மற்றும் மகள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் படுகாமடைந்த இருவரும் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்படும் போது 21 வயதுடைய மகள் உயிரிழந்துள்ளார்.

குடும்ப பிரச்சினை காரணமாகவே குறித்த தாக்குதல் நடைப்பெற்றுள்ளது. இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் காயமடைந்த தாயின் இரண்டாவது கணவர் என்பதுடன், உயிரிழந்த மகள் காயமடைந்த தாயின் முதலாவது கணவனுக்கு பிறந்தவர் என் தெரியவந்துள்ளது.

குறித்த தாக்குதல் தொடர்பில் நொச்சியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]