நைல் நதியில் படகொன்று மூழ்கியதில் 23 பாடசாலை மாணவர்கள்; உயிரிழப்பு!

சூடான் நைல் நதியில் படகொன்று மூழ்கியதில் 23 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

நைல் நதியூடாக நேற்று புதன்கிழமை பாடசாலைக்கு 40 சிறுவர்களை ஏற்றி சென்றுகொண்டிருந்த குறித்த படகே இவ்வாறு மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த படகின் இயந்திரம் பழுதடைந்திருந்ததே இவ்விபத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 24 பேர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை இருவரின் சடலங்கள் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறித்த மாணவர்களின் பாடசாலை தலைமை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த மாணவர்கள் 7 வயது தொடக்கம் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அதில் மாணவிகளே அதிகமாக காணப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த பாடசாலைக்கு மாணவர்கள் நடந்துசெல்வதே வழமையாக கொண்டிருந்த போதிலும், கடந்த சில காலமாக தொடர்ந்து பெய்து வரும் அடைமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மாணவர்கள் தங்கள் பணிகளுக்கு படகை பயன்படுத்தி வந்துள்ள நிலையில், இக்கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]