நைஜீரியாவில் ஏற்பட்டுள்ள கனமழையில் 100இற்கு அதிகமான மக்கள் பலி

நைஜீரியாவில் ஏற்பட்டுள்ள கனமழையில் 100இற்கு அதிகமான மக்கள் பலி

நைஜீரியா நாட்டில் ஏற்பட்டுள்ள கனமழையில் இதுவரை 100இற்கு அதிகமான மக்கள் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களாக நைஜீரியா நாட்டில் பலத்த மழை பெய்து வருகிற நிலையில், இந்த மழையால் நைஜீரியாவில் உள்ள 10க்கும் மேற்பட்ட மாகாணங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நைஜீரியாவிலுள்ள கோகி, நைஜர், அனம்ப்ரா மற்றும் டெல்டா ஆகிய மாகாணங்களை பேரிடர் மாகாணங்களாக அந்நாட்டு பேரிடர் மீட்பு குழு அறிவித்துள்ளது.

கனமழை பெய்து வருவதால் குறித்த மாகாணங்களில் நிவாரண மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதோடு, வெள்ளம் வடிந்ததும் விரைவில் மீட்பு பணிகள் தொடங்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நைஜீரியாவில் ஏற்பட்டுள்ள நைஜீரியாவில் ஏற்பட்டுள்ள நைஜீரியாவில் ஏற்பட்டுள்ள நைஜீரியாவில் ஏற்பட்டுள்ள

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]