நேற்றைய போட்டியில் அபார வெற்றிகொண்டது ராஜஸ்தான் ரோயல்ஸ்!

ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கிடையிலான நேற்றைய ஐ.பி.எல். போட்டியில் டக்வர்த் லிவிஸ் முறைப்படி ராஜஸ்தான் அணி 10 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணியின் ஆரம்பம் சிறப்பாக இல்லாவிடினும், அதிரடியாக ஆடிய சஞ்சு செம்சுன் 22 பந்துகளுக்கு 37 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மறுமுனையில் நிதானமாக ஆடிய ரஹானே 40 பந்துகளுக்கு 45 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பின்னர் களமிறங்கிய பட்லர் 18 பந்துகளில் 29 ஓட்டங்களை விளாச, ராஜஸ்தான் அணி 17.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை பெற்றது.

இதன்போது போட்டியில் மழை குறுக்கிட்டதால், டெல்லி அணிக்கு 6 ஓவர்களுக்கு 71 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

எனினும் டெல்லி அணி 6 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுகளை இழந்து 60 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பந்து வீச்சில் துள்ளியமாக பந்து வீசிய லாப்லின் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும், உனாட்கட் ஒரு விக்கட்டினையும் வீழ்த்தினர்.

இதன்படி ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி தங்களது முதல் வெற்றியினை நேற்று பதிவுசெய்துள்ளது.

இந்த போட்டியின் சிறப்பாட்டக்காரராக சஞ்சு செம்சுன் தெரிவுசெய்யப்பட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]