நேற்று சபரிமலையில் இரண்டு பெண்கள் தரிசனம் – தனது பாதி மீசையை எடுத்த நபர்! புகைப்படங்கள் உள்ளே!

கடந்த 2018 செப்டம்பர் 28ம் திகதி அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு சென்று ஐயப்பன் கோவிலில் வழிப்படலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனை தொடர்ந்து பெண்கள் நுழைய முயன்ற போது போராட்டங்கள் நடத்தப்பட்டது. அந்நேரத்தில் கேரள மாநிலம், மன்னார் மாவட்டத்தில் இருக்கும் ராஜேஷ் குருப் என்பவர் சபரிமலை ஐயப்பன் சிலையை நெஞ்சில் வைத்திருப்பது போலவும், காவல் துறையினர் அவரை காலால் எட்டி உதைப்பது போலவும், கழுத்தில் அரிவாள் வைத்திருப்பது போலவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலானது.

இறுதியில் அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்றும், போலியாக புகைப்படங்களை போட்டோஷாப் செய்து பதிவிட்டமை கண்டுப்பிக்கப்பட்டது.

நேற்று இரண்டு பெண்கள் சபரிமலையில் ஐயப்பன் தரிசனம் செய்துள்ளனர். இதை தொடர்ந்து நடை சாத்தப்பட்டது.

இந்நிலையில், ராஜேஷ் குருப் தன்னுடைய பாதி மீசையை எடுத்துள்ளார், இதுதொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இன்று கேரளாவில் பந்த் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]