நேற்று இடம்பெற்ற 8 வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்வு

இலங்கையில் நேற்று (21) காலை முதல் இடம்பெற்ற 8 வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளதுடன் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் சந்தேகத்தின் பேரில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் குற்றப்புலனாய்வு திணைகளத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]