நேற்றிரவு மேற்கொண்டதிடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1670 பேர் கைது

நாடளாவிய ரீதியில் பொலிஸார் நேற்றிரவு மேற்கொண்ட நான்கு மணி நேர திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1670 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று (31) அதிகாலை 03.00 மணி வரை இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நேரத்தில் 1308 இடங்களில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிஸார் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்களில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 719 பேர் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 397 பேரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி வைத்திருந்த 05 பேரும் வேறு பல குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட கைது செய்யப்பட்டவர்களுள் 554 பேரும் உள்ளடங்குகின்றனர்.

அதேவேளை, வாகனப் போக்குவரத்து விதி முறைகளை மீறிய சாரதிகள் சம்பந்தமாக 3715 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விஷேட சுற்றிவளைப்பின் போது 11 கிலோவும் 193 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 13.943 கிராம் ஹெரோய்ன் மற்றும் 3860 லீட்டர் சட்டவிரோத மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையில், 42,673 பேர் மற்றும் 20,913 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]