‘நேர் கொண்ட பார்வை’ படப்பிடிப்பு பற்றி கூறிய டெல்லி கணேஷ் – வைரலாகும் வீடியோ!

நடிகர் அஜித் தங்போது தனது 59வது படமான ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார்.  வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார்.

அஜித்துடன் பகைவன், தொடரும், ஜனா போன்ற படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் டெல்லி கணேஷ், நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் அஜித்தை நான் ஒரு கோர்ட் சீனில் தான் பார்த்தேன். அப்போது என்னை கண்டதும், சார் என்று கூறி என்னை கட்டித் தழுவிக் கொண்டார்’ என்று கூறியுள்ளார்.

இவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]