நேருவுக்கு பின்னர் மலையகத்திற்கு செல்லும் இந்திய பிரதமர் மோடி

நேருவுக்கு பின்னர் மலையகத்திற்கு செல்லும் இந்திய பிரதமராக மோடி வரலாற்றில் பதிவாகவுள்ளார்.

பிரிட்டிஸ் காலனித்துவ ஆட்சியிலிருந்து பாரத தேசம் சுதந்திரம் பெற்ற பின்னர் அந்நாட்டின் பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட ஜவகர்லால் நேரு 1939 ஆம் ஆண்டு இலங்கையின் மலையகப் பகுதிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

தென்னிந்திய மக்களை பிரிட்டிஸ் காரர்கள் இலங்கைக்கு அழைத்துவந்திருந்தனர். பஞ்சம் வறுமை உள்ளிட்ட காரணங்களால் பலர் அங்கிருந்து இடம்பெயர்ந்துவந்துவிட்டனர். இலங்கை வரும் வழியிலும் இங்கு வந்த பின்னரும் பல்வேறு துன்பங்களை அவர்கள் எதிர்கொண்டனர்.

குறிப்பாக 1930 காலப்பகுதியில் இலங்கையில் இந்திய எதிர்ப்பு கோஸம் மேலெழத் தொடங்கியது.இதனால் இந்தியாவிலிருந்து வந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அம்மக்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கும் முகமாக அமரர். நேரு இலங்கை வந்திருந்தார். இலங்கையின் அப்போதைய பிரதமர் அமரர். டி.எஸ். சேனாநாயக்க உள்ளிட்ட அரசப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். ஆனால் உரிய தீர்வு கிடைக்கவில்லை.

நேருவுக்கு பின்னர்

இதையடுத்து இந்திய வம்சாவளியினரை சந்தித்து ஐக்கியத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுத்தார். கண்டி கம்பளையில் நடைபெற்ற சந்திப்பில் இந்திய இலங்கை காங்கிரசும் உதயமானது. சுதந்திர இலங்கையின் பின்னர் அதுவே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாக மாறியது. இந்தக் கட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னரே மலையக மக்களுக்கு அரசியல் ரீதியாக பல இலக்குகளை அடையமுடிந்தது.

அதன்பின்னர் இந்தியாவின பிரதமர்கள் இலங்கை வந்துள்ளனர். ஆனால்இ எவரும் இலங்கைவாழ் இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினையை மையப்படுத்தி வரவில்லை. 1987 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு பிரச்சினையை அடிப்படையாகக்கொண்டே ராஜீவ் காந்தி வருகை தந்திருந்தார்.

எனினும் இன்று மலையகத்திலுள்ள கூட்டணியொன்றின் அழைப்பையேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலையகம் வரவுள்ளார்.

ஹட்டன் கிளன்டனிலுள்ள வைத்தியசாலையை திறந்துவைக்கவுள்ள அவர்இ மக்கள் மத்தியில் உரையாற்றவுமுள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியுடனும் பேச்சு நடத்தவுள்ளனர். இதற்கு முன்னர் மோடி இலங்கை வந்திருந்தாலும் மலையகப் பகுதிக்கு செல்லவில்லை. 1939 இற்கு பிறகு பாரத பிரதமர் பிராந்தியத்தின் வல்லரசு நாடொன்றில் பிரதமர் மலையகம் செல்வது இரண்டாவது சந்தர்ப்பமாக பார்க்கப்படுகின்றது.

அன்று மலையக மக்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்தினார் நேரு. அதன்பின்னர் இந்திய அரசுகளை மலையகத்திலுள்ள அரசியல் தலைமைகள் உரிய வகையில் பயன்படுத்தவில்லை. எனவே மோடியின் பயணத்தையாவது சரிவர பயன்படுத்தி கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

அதேவேளை அன்று மலையக மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியில் நேரு இறங்கினார். இன்று தமிழ் முற்போக்கு கூட்டணி ஒற்றுமையாகவே இருக்கின்றது. எனினும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனித்த இருக்கின்றது. ஆகவே மலையக மக்களுக்காக சகல தரப்பும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை அவர் விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]