முகப்பு News Local News நேபாள ஜனாதிபதியுடன் மைத்திரியின் உத்தியோகப்பூர்வ சந்திப்பு இன்று

நேபாள ஜனாதிபதியுடன் மைத்திரியின் உத்தியோகப்பூர்வ சந்திப்பு இன்று

நேபாள ஜனாதிபதியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகப்பூர்வ சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

குறித்து சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளதாகவும், இதன்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய இருதரப்பு சந்திப்பொன்று முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமாதானம், சுபீட்சம் மற்றும் மேண்தகு தன்மைவாய்ந்த வங்காள விரிகுடாவை நோக்கி’ என்ற கருப்பொருளில் பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் உச்சி மாநாடு இன்று ஆரம்பமாகிறது.

பிம்ஸ்டெக் அமைப்பானது, பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய 07 தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளைக் கொண்ட வலையமைப்பாகும்.

இந்த மாநாட்டில் கலந்துக்கொள்ள நேபாளத்திற்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று நேபாள ஜனாதிபதியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.

இதேவேளை மாநாட்டில் பங்குபற்றும் சில அரச தலைவர்களுடனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேபாளத்திற்கு நேற்று உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வங்காள விரிகுடாவின் பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (பிம்ஸ்டெக்) உச்சிமாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

நேபாளத்தை சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிக்கு நேபாளத்தில் பலத்த வரவேற்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com