நேபாள இராணுவ தளபதி இலங்கைக்கு விஜயம்

நேபாள இராணுவ தளபதி

நேபாள இராணுவ தளபதி ஜெனரல் ராஜேந்திர சேத்ரி, அவரது பாரியார் மற்றும் பத்து இராணுவ பிரதிநிதிகள் உள்ளடக்கிய குழுவினர், இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பு பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தை இன்று வந்தடைந்த நேபாள இராணுவ தளபதியை இலங்கை இராணுவ பதவி நிலை அதிகாரி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர விமான நிலையத்தில் வரவேற்றார்.

நேபால் இராணுவ தளபதியின் விஜயத்தில் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு தலைமை அதிகாரி மற்றும் முப்படை தளபதிகளை ஆகியோருடனான சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளன.