முகப்பு Business நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு 7, 152 மில்லியன் ரூபாய் நட்டம்

நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு 7, 152 மில்லியன் ரூபாய் நட்டம்

2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் வரையான 5 வருடங்களில் நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு 7 ஆயிரத்து 152 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சபையின் தலைவர் உபாலி மொஹோட்டி இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், கடந்த அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் காரணமாக இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் சோமாலியாவுக்கு இலவசமாக அரிசி ஏற்றுமதி செய்தமை, ஒரு கிலோகிராம் 42 ரூபாய் வீதம் கொள்வனவு செய்த ஒரு மெற்றிக்தொன் அரிசியை, தனியார் நிறுவனத்துக்கு 24 ரூபாய் வீதம் வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் காரணமாக இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெல் சந்தைப்படுத்தும் சபையில் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, அரச நிறுவனமான நெல் சந்தைப்படுத்தும் சபையானது கடந்த காலத்தில் நட்டத்தை எதிர்நோக்கிய நிறுவனமாக செயற்பட்டு வந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நெல் சந்தைப்படுத்தும் சபையை இலாமீட்டும் அரச நிறுவனமாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, பீ.எம்.பி எனும் பெயரில் சகாய விலையில் அரசியை விநியோகம் செயவதற்கு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இந்தத் திட்டமானது இன்னும் இரண்டு மாதங்களில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com