நெல்லியடி பகுதில் 10 கிலோ கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியிலிருந்து கடத்த முற்பட்ட 10 கிலோ கேரள கஞ்சாவானது நெல்லியடி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் இரவு நெல்லியடி பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட தகவலையடுத்து வதிரி பகுதியில் வைத்து வீட்டொன்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல எனைய 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 10 கிலோ கேரள கஞ்சா மற்றும் வடி ரக வாகனமொன்று, முச்சக்கரவண்டி ஒன்று, மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]